Last Updated:

உணவகத்தை சட்டவிரோதமாக இடித்ததாக பிரபல தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News18

உணவகத்தை சட்டவிரோதமாக இடித்ததாக பிரபல தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர்களான வெங்கடேஷ், ராணா டகுபதி ஆகியோரின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் ஐதராபாத் Film நகரில் உள்ளது. இந்த இடத்தை நந்தகுமார் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்த நிலையில், அதில், Deccan Kitchen என்ற பெயரில் நந்தகுமார் உணவகம் நடத்தி வந்தார்.

இந்த இடத்தின் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த உணவகத்தை நடிகர் வெங்கடேஷின் குடும்பத்தினர் சட்டவிரோதமாக இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், தனக்கு 20 கோடி ரூபாய் இழக்கு ஏற்பட்டதாகவும், வெங்கடேஷ், ராணா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நந்தகுமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், அவரது சகோதரரும் தயாரிப்பாளருமான டகுபதி சுரேஷ், சுரேஷின் மகனும் பிரபல நடிகருமான ராணா டகுபதி, ராணாவின் சகோதரரும் தயாரிப்பாளருமான அபிராம் ஆகியோர் மீது Film நகர் காவல்நிலையத்தில் குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



Source link