Last Updated:
Romeo And Juliet’ star Olivia | ஜூலியட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒலிவியாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோமியோ அண்ட் ஜூலியட் திரைப்படத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்லி காலமானார்.
அர்ஜெண்டினாவில் பிறந்து லண்டனில் வளர்ந்த நடிகை ஒலிவியா ஹஸ்லி 1968 ஆம் ஆண்டு பிராங்கோ ஜெபிரெல்லி இயக்கத்தில் வெளியான ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக ஒலிவியா சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றார்.
மேலும் ஜீஸஸ் ஆஃப் நாசரேத் என்ற தொலைக்காட்சி தொடரில் இயேசுவின் தாயான மரியா கதப்பாத்திரத்தில் நடித்தும் ஒலிவியா ஹஸ்லி பிரபலமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஒலிவியா வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஒலிவியா நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கலைத்துறைக்காக அவர் தனது வாழ்க்கையை அர்பணித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலியட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒலிவியாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
December 28, 2024 1:33 PM IST