இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில், அவர்களது மகன் அமீன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. மனைவி பிரிவை அறிவித்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் தரப்பில் எந்த அறிவிப்பும் வராத நிலையில், அவர்களது மகன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

விளம்பரம்

Also Read: 
AR Rahman Divorce: கண்ணுக்குத் தெரியாத முடிவாக..! – திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரகுமான்

இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறந்த ஜோடிகள் என்ற பாராட்டை பெற்றிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாய்ரா பானு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின்னர் சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரகுமானை பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவருக்கொருவர் அதிக அன்பு செலுத்திய நிலையில், அழுத்தங்களும், சிரமங்களும் நிரப்ப முடியாத அளவு இடைவெளியை இருவரிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை யாராலும் தீர்க்க முடியாது என்று சாய்ரா பானு தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரோல் மாடல் ஜோடியாக வலம் வந்த அவர்கள் பிரிகிறார்கள் என்று சில ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – AR Rahman Divorce : மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்… 29 ஆண்டுகால உறவு முடிவுக்கு வருகிறது…

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதில் அவர், ‘இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு (Privacy) மதிப்பு அளிக்குமாறு எல்லோரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

.



Source link