Last Updated:

தற்போது தென் ஆப்பிரிக்கா 63.33 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (60.71) இரண்டாவது இடத்திலும், இந்தியா (57.29) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

News18

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை உள்ள பிரிஸ்பேனில் இந்தப் போட்டி நடைபெவதால், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

13.2 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டத்தின்போது, மழை காரணமாக ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. பிரிஸ்பேனில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிக மழை பெய்தால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடியலாம்.

இந்தப் போட்டி டிரா ஆனால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதாவது WTC (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) புள்ளி அட்டவணையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

தற்போது தென் ஆப்பிரிக்கா 63.33 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (60.71) இரண்டாவது இடத்திலும், இந்தியா (57.29) மூன்றாவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை (45.45) நான்காவது இடத்தில் உள்ளது. இந்த 4 அணிகளும் WTC இறுதிப் போட்டிக்கான போட்டியில் உள்ளன.

இப்போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடியும் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளின் புள்ளிகள் குறையும் ஆனால் புள்ளி பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆட்டம் டிராவானால் ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 60.71ல் இருந்து 58.89 ஆக குறையும். இந்தியாவின் புள்ளிகள் 57.29ல் இருந்து 55.88 ஆக குறையும். ஆனால் இரு அணிகளின் தரவரிசை மாறாது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் தொடரும். அதேபோன்று தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும் இலங்கை நான்காவது இடத்திலும் தொடரும்.

இதையும் படிங்க – 13 ஐபிஎல் வீரர்களை விட குறைவுதான்… செஸ் சாம்பியன் குகேஷுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்வது என்பது இந்திய அணியின் கையை விட்டு நழுவியுள்ளது. இதனால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் இந்தியா WTC போட்டிக்கு முன்னேறலாம் அல்லது அதில் விளையாடும் தகுதியை இழக்கலாம்.



Source link