நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தங்கக் கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார் என்றும், முக்கிய ரோலில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் எனப் பலரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
‘கூலி’ படத்தை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பணிகளை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தொடங்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்த ரஜினிகாந்தின் பிறந்தநாளான இந்த மாதம் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகலாம் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதன்படி, ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் – மணிரத்னம் காம்போவில் ஏற்கனவே வெளியான ‘தளபதி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் 34 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிரத்னம் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக்லைஃப்’ படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.