Last Updated:

இமான் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்

News18

தனது பிறந்த நாளையொட்டி இசையமைப்பாளர் இமான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அவருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளராக இமான் இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு முன்பு சின்னத்திரை மெகா சீரியல் பாடல்களுக்கு இசையமைத்து வந்தார்.

சினிமாவில் என்ட்ரி கொடுத்த இமான் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், மாதவன் நடித்த ரெண்டு, மைனா, கும்கி உள்ளிட்ட படத்தின் பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் என்ற பாடல் நீண்ட நாட்களுக்குப் பின்னரும் ரசிக்கப்பட்டு வந்தது. பெரிய ஹீரோக்களை பொறுத்தளவில் அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

அதிக எடையுடன் காணப்பட்ட அவர் கடுமையான உணவு கட்டுப்பாட்டால் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இமான் தனது 42 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க – 19 வயதில் தமிழ் படம்.. இன்று 44 வயது.. 12 படங்கள் தொடர் தோல்வி.. அரச குடும்பம்.. இன்றும் நடிப்பில் கவனம் ஈர்க்கும் நடிகை யார் அவர்?

அதாவது தனது மறைவுக்கு பின்னர் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக இமான் உறுதியளித்துள்ளார்.

அவரது இந்த முடிவு பாராட்டுகளை குவித்து வருகிறது. திரையுலகத்தினர் பலரும் இசையமைப்பாளர் இமானை பாராட்டியுள்ளனர்.





Source link