Last Updated:
கலைத் துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரும் எழுத்தாளருமான சியாம் பெனகல் மும்பையில் காலமானார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட சியாம் பெனகல், எ சைல்ட் ஆப் தி ஸ்ட்ரீட்ஸ், ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.
வங்கதேசத்தின் முதல் அதிபர் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கையை Mujib The Making of a Nation என்ற பெயரில் கடந்த 2023-ஆம் ஆண்டு படமாக எடுத்தார். பெரிய அளவில் இந்தப் படம் பேசப்பட்டு கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிக்க: முதலமைச்சருடன் மோதல்.. அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய போலீஸ்!
தனது திரைப்படத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சியாம் பெனகல், அங்கூர் திரைப்படம் மூலம் உலக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தொடர்ந்து நிஷாந்த், மந்தன், பூமிகா, மண்டி உள்ளிட்ட படங்கள் சியாம் பெனகலுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை சியாம் பெனகல் இயக்கி இருக்கிறார்.
கலைத் துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய சியாம் பெனகல், சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சியாம் பெனகல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
December 24, 2024 7:58 AM IST