விதவிதமாக பச்சைக் குத்திக் கொள்ளுதல் தற்போது ஒரு பேஷனாகி விட்டது. கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி, கழுத்து, முகம் வரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். பச்சைக் குத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் அறிவதில்லை. மருத்துவமனைகளில், ஊசியின் மேல் உள்ள கவரை கண் முன்னே பிரிக்கா விட்டால், ஊசி போட மறுப்பவர்கள் உள்ள காலத்தில், ஒரே ஊசியை வைத்து பச்சைக் குத்துவதை பலரும் மறுப்பதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, எலிகளுக்கு பச்சைக் குத்திக் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் பச்சை குத்தும் சிவப்பு மையில் கல்லீரல் புற்றநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த இரசாயனம் எலிகளுக்கு புற்று நோயை உண்டாக்கி உள்ளன. இது மனிதர்களுக்கும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். பச்சை மையில் உள்ள ஆபத்தான இரசாயனங்கள், சருமம், நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். அவை நரம்பு மண்டலத்தையும் பாதித்து மூளைக்கும் தீங்கு விளைவிக்கும்.

2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்ட ஆய்வு, பச்சை குத்தும் மையில் 83% பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உள்ளன; அவை புற்றுநோயை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளது. ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழகம் 2007 மற்றும் 2017 க்கு இடையில் இரத்த புற்றுநோயால் (லிம்போமா) பாதிக்கப்பட்ட 20 முதல் 60 வயதுடைய சிலரின் இரத்த மாதிரிகளை சேகரித்து ஒரு ஆய்வை செய்தது. லிம்போமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21% பேர் தங்கள் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பச்சை குத்தும் மையின் 75 மாதிரிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் 26 மாதிரிகளில் கடுமையான தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பச்சை குத்துவது ஒரு போதும் நல்ல விஷயம் கிடையாது. இது ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. சரும உணர்திறன் உள்ளவர்கள் பச்சை குத்தக்கூடாது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் பச்சைக் குத்திக் கொள்ள கூடாது. ஆனால், மக்கள் அதை பெருமைக்காக குத்திக் கொள்கிறார்கள்.

உடலில் நிரந்தர அடையாளம் ஏற்படுத்தும் பச்சைக் குத்தும் முறையால் ஒருவருக்கு ராணுவம் அல்லது பாதுகாப்பு துறைகளில் வேலைக்கு சேர முடியாமல் போகலாம். வெளி நாடுகளுக்கு செல்லும் போது கடுமையான சோதனைகளை அனுபவிக்கலாம்.

பல நேரங்களில் பச்சை குத்தும் கலைஞர்கள் பழைய மையை பயன்படுத்துகிறார்கள். அதில் பாக்டீரியா இருக்கலாம்; இது தொற்றுநோயை ஏற்படுத்தும். மச்சங்கள் அல்லது மருக்கள் அதிகம் உள்ள தோலின் பகுதிகளில் பச்சை குத்துவது அதிக ஆபத்தை உருவாக்கும்.

பச்சைக் குத்தி விட்டு அதை லேசர் மூலம் அழிக்கிறார்கள். லேசர் மூலம் அழிப்பதால் அந்த அடையாளம் கொஞ்சம் மறையுமே தவிர, பச்சை குத்திய பாதிப்பு உள்ளே இருக்கத்தான் செய்யும். ஆதலால் பச்சைக் குத்துவதை தவிர்த்து விடுங்கள்.

The post புகை பிடிப்பதால் மட்டுமல்ல, பச்சைக் குத்துவதாலும் புற்றுநோய் உண்டாகும் appeared first on Daily Ceylon.

Source link