Last Updated:

பிஎஸ்என்எல் புதிதாக 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

News18

பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் (BSNL) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் யூஸர்களுக்கு 2 புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களின் (STVs-களின்) விலை ரூ.215 மற்றும் ரூ.628 மற்றும் முறையே 30 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டுடன் வருகிறது. மேற்கண்ட 2 பிளான்களும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், அன்லிமிட்டட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற பலன்களை யூஸர்களுக்கு வழங்குகின்றன. மேலும் Zing மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோடெல்-லுக்கான அக்சஸ் போன்ற சிறப்பு பலன்களையும் யூஸர்கள் பெறுவார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய பிளான்கள் பற்றி TelecomTalk தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிளான்கள் BSNL வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. ரூ.215 பிளானானது 30 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள MTNL நெட்வொர்க்கிற்கான அக்சஸ் உட்பட அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்ஸ்களை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் யூஸர்கள் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை பெற முடியும், இந்த லிமிட் முடிந்த பின், நெட் ஸ்பீட் 40kbps-ஆக குறைக்கப்படும், மேலும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS இந்த பிளானில் கிடைக்கிறது. இந்த பிளான் Zing மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல், கேமியம், கேம் ஆன்,Challenger Arena games Lystn Podcast மற்றும் ஹார்டி கேம்ஸ் போன்றவற்றுக்கான சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய பிற மதிப்பு கூட்டப்பட்ட சர்வீஸ்களை வழங்குகிறது.

இதனிடையே ரூ.628 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டை கொண்டுள்ளது, இது யூஸர்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது. தினசரி 3GB டேட்டாவை வழங்கும் இந்த பிளானின் தினசரி லிமிட் முடிந்த பின் டேட்டா ஸ்பீட் 40kbps-ஆகக் கட்டுப்படுத்துகிறது.

BSNL-ன் ப்ரமோஷ்னல் ஆஃபர்:

முன்னதாக கடந்த மாதம் BSNL அதன் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பிளான்களில் ஒன்றில் யூஸர்களுக்கு ஒரு ப்ரமோஷ்னல் ஆஃபரை வெளியிட்டது. அதன்படி இந்த ஆஃபரின் மூலம், ப்ரீபெய்ட் யூஸர்கள் BSNL Selfcare ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது, ​​திட்டத்தின் தற்போதைய பலன்களுடன் கூடுதலாக 3GB டேட்டாவை பெறலாம். 84 நாள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானுடன் இந்த பலன்கள் பொருந்தும் மற்றும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா, அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளுடன் வருகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

BSNL: புதிதாக 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ள பிஎஸ்என்எல்… முழு விவரம் இதோ!



Source link