புதியனவற்றை சோதிக்கும் ஆய்வு கூடமாக இந்தியா உள்ளது என்கிற ரீதியில் பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. உலகில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார்.
இவர் பிரபல வேலை தேடும் தளமான ‘லிங்க்டு இன்’ என்பதன் இணை நிறுவனர் ரீட் ஹாப் மேனுடன் நேர்காணலில் பதில் அளித்தார். போட் கேஸ்ட் முறையில் இந்த நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது பில் கேட்ஸிடம் ஹாப் மேன் ஏராளமான கேள்விகளை எழுப்பினார். அதில் இந்தியா குறித்தும் கேள்விகள் இடம் பெற்றன.
நேர்காணலின்போது இந்தியா குறித்த கேள்விகளுக்கு பில்கேட்ஸ் அளித்த பதிலில் கூறியதாவது- “இந்தியா கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் மேம்பட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உயர்தகு முன்னேற்றங்கள் இருக்கும். புதியனவற்றை செய்யக்கூடிய, பரிசோதித்து பார்க்கக்கூடிய ஆய்வகமாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நீங்கள் ஒரு விஷயத்தை சோதித்து வெற்றி பெற்று விட்டால், அந்த விஷயத்தை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லலாம். அமெரிக்காவை தவிர்த்து, இந்தியாவில் தான் எங்களுடைய மிகப்பெரிய அறக்கட்டளை அலுவலகம் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க – ரூ.3,600 கோடி சொத்து மதிப்பு.. இந்த 21 வயது இளம் கோடீஸ்வரர் பற்றி தெரியுமா?
இந்தியாவை அவர் சோதனை செய்யும் ஆய்வகம் என்று கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமானோர் பில்கேட்ஸிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் இந்தியா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு பில்கேட்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
.
- First Published :