நாட்டின் மிகவும் மலிவு விலை 5G போன்களில் ஒன்றாக இருக்க போகும் Redmi A4 5G மொபைலை, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற IMC 2024 நிகழ்வில் வெளிப்படுத்தியது. Xiaomi நிறுவனம் புதிய Snapdragon 4s Gen 2 சிப்செட்டிற்காக Qualcomm நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இந்த சிப்செட் தான் விரைவில் அறிமுகமாகவிருக்கும் Redmi A4 5G மொபைலில் இடம் பெற போகிறது.
சியோமி இந்தியா நிறுவன தலைவர் முரளிகிருஷ்ணன் இந்த மொபைல் குறித்து பேசுகையில், இதன் வணிக வெளியீடு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என்று கூறினார். மிகவும் மலிவு விலையில் 5G திறன் கொண்ட டிவைஸ்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோன், ஒரு பெரிய தோராயமாக சொல்வதென்றால் 6.7-இன்ச் சைஸ் கொண்ட ஒரு ஃபிளாட் டிஸ்ப்ளேவை கொண்டிருப்பதை வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் மூலம் கணிக்க முடிகிறது.
மேலும் இந்த மொபைல் ரவுண்டட் எட்ஜஸ்களுடன் கூடிய ஃபிளாட் கார்னர்ஸ்களையும் பின்புறத்தில் ஒரு ரவுண்ட் கேமரா மாட்யூலையும் கொண்டுள்ளது. இதன் பின்புறம் டூயல் கேமரா செட்டப் மற்றும் 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது ரூ.10,000-க்கு கீழ் உள்ள டிவைஸ்களிலேயே அதிக பிக்சல் கொண்ட கேமராவாக இது இருக்கும். Redmi A4 5G மொபைலின் மேல் விளிம்பில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. டெமோவில் வரவிருக்கும் புதிய மொபைலின் இரண்டு வண்ணங்கள் காட்டப்பட்டன. அவை பிளாக்மற்றும் சில்வர் கலர் ஆப்ஷன்கள் ஆகும்.
இந்தியாவில் Xiaomi தனது வணிகத்தை துவக்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த 10 ஆண்டுகளில், இந்திய சந்தையில் 25 கோடி ஸ்மார்ட் ஃபோன்களை நிறுவனம் ஷிப்பிங் செய்து உள்ளதாக சியோமி இந்தியா தலைவர் கூறி இருக்கிறார். Xiaomi அடுத்த 10 ஆண்டுகளில் 70 கோடி டிவைஸ்களை ஷிப்பிங் செய்ய இலக்கு வைத்துள்ளதாகவும் அறிவித்தார். இதனிடையே Redmi A4 5G மொபைல் “அனைவருக்கும் 5G” என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஸ்னாப்டிராகனின் புகழ்பெற்ற சிப்செட் தொழில்நுட்பத்துடன் சியோமியின் மலிவு விலை அதே சமயம் ஹை-குவாலிட்டி டிவைஸ்களில் கவனம் செலுத்துவதால், இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது சிறந்த மற்றும் மலிவு ஸ்மார்ட் ஃபோன்களுக்கான இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையுடன் ஒத்துப்போகிறது, மேலும் மேம்பட்ட அம்சங்களை அதிக யூஸர்களை சென்றடைய உதவுகிறது. இதனிடையே அறிக்கை ஒன்று Redmi A4 5G ஸ்மார்ட்ஃபோன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிவிக்கிறது.
Redmi A4 5G-ல் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் NavIC செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான ஆதரவு மற்றும் டூயல் ஃப்ரீக்வென்ஸி GPS (L1+L5) ஆகியவை அடங்கும். இந்த மொபைல் டூயல் 5G சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5.1, NFC கனெக்டிவிட்டி மற்றும் Wi-Fi உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MIUI 15 இல் இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
.