புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு மக்களுக்கு இது உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக பாதுகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது கொழும்பு மகாவலி கேந்திர மண்டபத்தில் நடைபெற்றது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் சுகாதார சேவையானது மிக விரைவாக கட்டமைப்பு ரீதியான மாற்றமாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.



Source link