U&i நிறுவனம் இந்தியாவில் ஆடியோ ப்ராடக்ட்ஸ் மற்றும் பவர்பேங்க் என சமீபத்தில் புதிதாக மொத்தம் நான்கு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தனது யூஸர்களின் அன்றாட வசதியை மேம்படுத்த Budget 99 TWS என்ற இயர்பட்ஸ், ரெவல்யூஷன் சீரிஸ் நெக்பேண்ட், பவர் க்யூப் சீரிஸ் மற்றும் வேலார் (Velar) சீரிஸ் பவர் பேங்க்ஸ் என மொத்தம் நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
U&i அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய தயாரிப்புகள் ஒவ்வொன்றும் தொழில்நுட்பத்தை மலிவு விலையில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறை மற்றும் ஸ்டைலான தொழில்நுட்ப தீர்வுகளை யூஸர்களுக்கு வழங்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.
பட்ஜெட் 99 TWS இயர்பட்ஸானது ENC டெக்னலாஜி, 36 மணிநேர மியூசிக் டைம், குயிக் சார்ஜ், டச் கன்ட்ரோல்ஸ் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெவல்யூஷன் சீரிஸ் நெக்பேண்டானது ENC டெக்னாலாஜி மட்டுமின்றி 300 மணிநேர ஸ்டாண்ட்-பை-டைம், ஸ்ட்ராங் மேக்னட்டிக் இயர்பட்ஸ், ப்ளூடூத் வெர்ஷன் 5.3 மற்றும் 10mm டிரைவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 600 ரோல்ஸ் ராய்ஸ்.. 25 ஃபெராரி… உலகிலேயே அதிக கார்கள் யாரிடம் உள்ளது தெரியுமா?
பவர்க்யூப் சீரிஸ் பவர்பேங்க்குகள் 22.5W அவுட்புட், 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், PD + QC மல்டி-ப்ரோட்டோகால் சப்போர்ட், எல்இடி லைட் இண்டிகேட்டர் மற்றும் ஒரு ஹிடன் ஸ்டாண்டை கொண்டுள்ளது. அதே நேரம் Velar சீரிஸ் பவர்பேங்க்குகள் 12W அவுட்புட்டை கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு யூஸர்களுக்கு “an all-in-one solution”-ஆக இருக்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. ஏனென்றால் இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் USB, FM மற்றும் TF கார்டு சப்போர்ட்டை வழங்குகிறது. பவர் பேங்க் ஸ்பீக்கர் யூனிட்டாக இயங்கும் என்பதை இந்த ஸ்பெஸிஃபிகேஷன்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த டிவைஸ் USB Type-C சார்ஜிங் சப்போர்ட் மற்றும் TWS ஃபங்ஷனை கொண்டுள்ளது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே ரெவல்யூஷன் சீரிஸ் நெக்பேண்ட்டானது மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இருப்பினும் நிறுவனம் என்னென்ன கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பதை குறிப்பிடவில்லை. அதே போல U&i நிறுவனத்தின் பட்ஜெட் 99 TWS சிலிகான் டிப்ஸ் மற்றும் ரவுண்டட் ஸ்டெம்ஸ்களுடன் இன்-இயர் டிசைனை கொண்டுள்ளது. இவை மொத்தம் நான்கு ஷேட்ஸ்களில் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
விலை எவ்வளவு?:
U&i நிறுவனத்தின் பட்ஜெட் 99 டிடபிள்யுஎஸ்-ன் விலை ரூ.499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் U&i-ன் ரெவல்யூஷன் நெக்பேண்ட்-ன் விலை ரூ.249-ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. U&i பவர்கியூப் மற்றும் வேலார் பவர்பேங்க்குகளின் விலைகள் முறையே ரூ.1,599 மற்றும் ரூ.899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
.