நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பதவி வகித்து வரும் சஞ்சய் மல்ஹோத்ரா, ஆர்.பி.ஐ.யின் அடுத்த ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து வந்த சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் நேற்றுடன் (டிச. 10ம் தேதி) முடிவடைந்ததைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள மல்ஹோத்ரா முன் முதலில் உள்ள சவால், பணவீக்கம். கடந்த அக்டோபர் மாதம் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பண வீக்கம் 6.2% ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பெரும் சவால் இவர் முன் இருக்கிறது.
அடுத்து இந்தியா ரூபாய் மதிப்பு விழ்ச்சி அடைந்துவருவது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 84.84 என இருக்கிறது.
அடுத்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பதி சற்று தோய்வைச் சந்தித்துவருகிறது.
இந்தியாவின் பணவியல் கொள்கையை உலகப் பொருளாதார மாற்றங்களுக்கு இணையாக கொண்டு வரவும், சர்வதேச சந்தையில் அதன் போட்டித்தன்மையை தக்கவைக்கவும் சஞ்சய் மல்ஹோத்ரா நீண்ட கால உத்திகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இதையும் படியுங்கள் :
New RBI Governor : வருவாய்த்துறை செயலாளர் டூ ஆர்.பி.ஐ. ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களுக்குரிய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதால் இது மிகவும் முக்கியமானது.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். உள்கட்டமைப்புக்கான முதலீடுகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு மற்றும் நிதித்துறையில் புதுமைகளை வளர்ப்பது ஆகியவை இந்த இலக்கை அடைவதில் முக்கியமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
.