புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இது உங்களுக்கான செய்தி. கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ், விவோ T3 அல்ட்ரா, மோட்டோரோலா ரேசர் 50 உள்ளிட்ட பல ஸ்டார்ட்அப்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அக்டோபர் மாதத்தில் பல ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளன. அக்டோபர் 2024இல் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
2024 அக்டோபரில் வரவிருக்கும் போன்கள்:
ஒன்பிளஸ் 13:
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதன்மை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த போன் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் என்றும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO 13:
விவோவின் துணை பிராண்டான iQOO அதன் பிரீமியம் ஸ்மார்ட்போனான iQOO 13 சீரிஸை அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை போலவே, iQOO 13ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 4 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் என்றும், IP68 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போன் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்புடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. iQOO 13 ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெப்ஃபிரஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும், இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,150mAh பேட்டரி உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S24 FE:
சாம்சங் ஏற்கனவே அதன் சமீபத்திய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த போன் ஆனது அக்டோபரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் சாம்சங் Exynos 2400e சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்புடன் வருகிறது.
இதையும் படிக்க:
செல்போனில் சத்தம் சரியா கேக்கலையா? – இதை செஞ்சு பாருங்க… 2 மடங்கு சவுண்ட் கூடும்!
லாவா அக்னி 3:
இந்தியாவில் லாவாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான, லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த போன் ஆனது அக்டோபரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் ஆனது 120Hz ரெப்ஃபிரஷ் ரெட் கொண்ட 6.78-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உடன் வரும். இந்த ஃபோன் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்புடன் வருகிறது. இந்த போனில் 64MP பிரைமரி ஷூட்டர், 8MP அல்ட்ரா வைட், 2MP மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் கேமரா செட்அப் பேக் சைடில் உள்ளது. அக்னி 3 ஆனது லாவாவின் own UIஇல் இயங்கும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையைக் கொண்டுள்ளது. இதில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப்:
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஜீரோ ஃபிளிப் என்ற ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபிளிப் போன் ஆனது அக்டோபரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஆனது 120Hz ரெப்ஃபிரஷ் ரெட் கொண்ட 6.9 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கவர் டிஸ்பிளேவில் 1056 x 1066 பிக்சல்கள் ரெசலூஷன் கொண்ட 3.64 இன்ச் AMOLED பேனல் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: mAadhaar ஆப்-ஐ பயன்படுத்தி பல ஆதார் ப்ரொபைல்களை நிர்வகிப்பது எப்படி? எளிய மற்றும் பாதுகாப்பான வழி இதோ…
இந்த ஃபோனில் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மாலி G77 MC9 GPU உடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்புடன் வருகிறது. இதில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸை கொண்டுள்ளது. மேலும், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP பிரன்ட் ஷூட்டர் கொண்டுள்ளது.
.