ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய மொபைல் காங்கிரஸ் 2024ல் இரண்டு புதிய ஜியோ பாரத் ஃபீச்சர் கொண்ட போன்களை அறிவித்துள்ளது. V3 மற்றும் V4 என்று பெயரிட்டுள்ள இந்த போன்கள் 4G ஆகும்.

ஜியோபாரத் V3 மற்றும் V4 இரண்டும் ரூ.1,099 விலையில் உள்ளன. ஆனால் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 14 ஜிபி டேட்டா பெற ரூ.123 மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த புதிய ஜியோபாரத் போன்கள் விரைவில் கடைகளிலும், இ-காமர்ஸ் தளங்களான ஜியோமார்ட் மற்றும் அமேசான் இந்தியாவிலும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

JioBharat V3 மற்றும் JioBharat V4 4G: அம்சங்கள்

வடிவமைப்பு: ஜியோபாரத் V3 மற்றும் V4 ஆகிய இரண்டு போன்களும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது யூசர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் பல்வேறு டிஜிட்டல் சேவைகளுக்கான சப்போர்ட்டையும் வழங்குகின்றன.

ஜியோ ஆப்ஸ் மற்றும் யுபிஐ: இரண்டு போன்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், ஜியோ ஆப்ஸ் மற்றும் யுபிஐ ஆப்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, யுபிஐ பேமென்ட்டுகளுக்கான ஜியோபே, இன்-பில்ட் சவுண்ட் பாக்ஸ் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. JioTV யூசர்களுக்கு 455க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களுக்கான சப்போர்ட்டை வழங்குகிறது. JioChat யூசர்கள் மெசேஜ், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள மற்றும் குரூப் சாட் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

விளம்பரம்

பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்புத் திறன்: JioBharat V3 மற்றும் V4 ஃபீச்சர் போன்கள் 1000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 128GB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கின்றன. மேலும் இதன் சிறப்பம்சம் 23 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள யூசர்களுக்கும் இந்த இரண்டு போன்களும் சிறந்ததாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. JioBharat-ஐ வேறுபடுத்துவது அதன் மலிவு. வரம்பற்ற குரல் அழைப்புகளையும், இந்தியாவில் 2ஜி பயனர்களுக்கு மலிவு விலையில் 4ஜி இணைப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ இந்த போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Gold Price : அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை… பின்னணி காரணங்கள் என்ன?

JioBharat V3 மற்றும் JioBharat V4 4G ரீசார்ஜ் திட்டம்:

ஜியோபாரத் V3 மற்றும் V4 ஆகிய இரண்டு போன்களுக்காக ரூ.123 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இது அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 14ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பதை ரிலையன்ஸ் ஜியோ உறுதிப்படுத்தியுள்ளது.

.



Source link