புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.