2023 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் சிறந்த படத்துக்கான விருது மம்மூட்டி ஜோதிகா முன்னணி கேரக்டரில் நடித்த காதல் தி ஓர் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை வரும் 13ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதுச்சேரி முதல்வர் வழங்க உள்ளார் இதனை படத்தில் இயக்குனர் ஜியோ பேபி பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி கிரேட் இன்டியன் கிச்சன் உள்பட பல நல்ல படங்களை எடுத்த ஜியோ பேபி இயக்கிய படம் காதல் – தி கோர். இந்தப் படத்தில், கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி மேத்யூ என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார் . அவரது மனைவி ஓமனா (ஜோதிகா), டீன்ஏஜ் மகள், வயதான தந்தை என சின்ன குடும்பம். ஊரிலும், அவர் சார்ந்த தேவாலயத்திலும் மேத்யூவுக்கு நற்பெயர். அவர்கள் கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேத்யூவை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட நிர்ப்பந்திக்கிறார்கள்.

விளம்பரம்

முதலில் மறுக்கும் மேத்யூ பிறகு சம்மதிக்கிறார். அவரே வெற்றி பெறுவார் என்ற நிலையில், ஓமனா மேத்யூவிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கிறார். ஓரினச்சேர்க்கையாளரான மேத்யூ தனது நண்பன் தங்கனுடன் பல வருடங்களாக உறவில் இருப்பதாக ஓமனா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது வீட்டிலும், நாட்டிலும் புயலை கிளப்புகிறது.

பிரச்சனைக்குரிய ஒரு கதையை சிக்கலில்லாமல் அலசிய ஜியோ பேபி அனைவரும் பாராட்டும் படியான படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருந்த நிலையில் விமர்சன ரீதியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்துக்கு புதுச்சேரி அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link