Last Updated:

புதுச்சேரியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மற்றும் என்டர்டெயின்மென்ட் சேவைகளை வழங்குவதற்காக மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

News18

நாட்டின் அரசாங்க தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதுச்சேரியில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மற்றும் என்டர்டெயின்மென்ட் சேவைகளை வழங்குவதற்காக மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைகள் மூலம், டிஜிட்டல் அனுபவத்தை முடிந்தவரை பலருக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதை BSNL நோக்கமாகக் கொண்டுள்ளது.

BSNL இன் இன்ட்ராநெட் டிவி (BiTV) என்பது புதுச்சேரியில் உள்ள மொபைல் யூசர்களுக்கு பிரீமியம் சேனல்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை இலவசமாக வழங்குகிறது. இது தற்போது OTTplay உடன் இணைந்து தொடங்கப்பட்ட பைலட் சேவையாகும். புதுச்சேரியில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் மொபைல் பயனர்களுக்கும் அவர்களின் திட்டங்களைப் பொருட்படுத்தாமல் டிஜிட்டல் கன்டென்ட்-ஐ எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலம், உயர்தர என்டர்டெயின்மென்ட்-ஐ வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து OTTplay இன் இணை நிறுவனர் மற்றும் CEO அவினாஷ் முதலியார் கூறியதாவது, “புதிய BiTV கண்டுபிடிப்பு மூலம், இந்தியா முழுவதும் உள்ள BSNL வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றும், நாங்கள் இந்தியாவில் BSNL வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பொழுதுபோக்கு அனுபவத்தை மாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

லைவ் டிவி தவிர, BiTV கூடுதல் பணம் எதுவும் செலுத்தாமல் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் ஆவணப்படங்களையும் வழங்குகிறது. கூடுதலாக, BSNL இன் பாதுகாப்பான மொபைல் இன்ட்ராநெட்டுடன் BiTV சிறந்த வீடியோ தரத்துடன் தடையில்லா ஸ்ட்ரீமிங்கை உறுதி செய்கிறது. புதுச்சேரிக்குப் பிறகு, 2025 ஜனவரிக்குள் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்த BiTVயை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, விரைவில் நாடு முழுவதும் இந்த சேவையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் தேசிய வைஃபை ரோமிங் வசதி மண்ணாடிப்பட்டு கிராமத்தில் தொடங்கப்பட்டது.

BSNL ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் நாடு முழுவதும் புதுமையான BSNL Wi-Fi ரோமிங் வசதியை அறிமுகப்படுத்தியது. மண்ணாடிப்பட்டு கிராமமானது நாட்டிலேயே முழுமையாக வைஃபை வசதி கொண்ட இரண்டாவது கிராமமாக மாறியுள்ளது. பிஎஸ்என்எல் இப்போது தனது தேசிய வைஃபை ரோமிங் வசதியை கிராமப்புறங்களில் வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த புதுமையான சேவையின் மூலம், BSNL மற்றும் BSNL அல்லாத வாடிக்கையாளர்களை Wi-Fi ஹாட்ஸ்பாட்களின் தடையற்ற நெட்வொர்க் மூலம் இணைகிறார்கள்.

BSNL FTTH வாடிக்கையாளர்கள் தங்கள் ஹோம் இன்டர்நெட்-ஐ எந்த BSNL Wi-Fi ஹாட்ஸ்பாட்டிலிருந்தும் கனெக்ட் செய்து அக்சஸ் செய்ய முடியும். அதற்கான கட்டணங்கள் உங்கள் ஹோம் டேட்டா அக்கௌன்ட்-இல் வசூலிக்கப்படும். BSNL FTTH வாடிக்கையாளர்களைத் தவிர, BSNL மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த அதிவேக Wi-Fi இணைப்பைக் கொண்டுவர நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இப்போது அனைத்து BSNL மொபைல் வாடிக்கையாளர்களும் BSNL Wi-Fi ஹாட்ஸ்பாட்டை தங்கள் மொபைல் திட்டத்தின் மூலம் இணைக்க முடியும். இதற்கு ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் அல்லாத வாடிக்கையாளர்கள் UPI கட்டணங்கள் மூலம் இந்த சேவைகளை அக்சஸ் செய்து கொள்ளலாம்.

BSNL இன் இன்ட்ராநெட் ஃபைபர் அடிப்படையிலான டிவி (IFTV) சேவை முதன்முதலில் நாடு முழுவதும் அக்டோபர் 2024 இல் தொடங்கப்பட்டது. இது இப்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து FTTH வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் இந்த சேவை முற்றிலும் இலவசம். அனைத்து BSNL FTTH வாடிக்கையாளர்களும் இந்த சேவையை முற்றிலும் இலவசமாகப் பெற முடியும். இந்த சேவையை செயல்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும்.

IFTV இன் சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் எதுவும் செலுத்தாமல் பிரீமியம் பொழுதுபோக்குகளைப் பெறலாம். BSNL இன் வலுவான மற்றும் பெரிய FTTH நெட்வொர்க்குடன், வாடிக்கையாளர்கள் மென்மையான மற்றும் ஹை குவாலிட்டி ஸ்ட்ரீமிங்கைப் பெறுவார்கள். விருப்பத்தேர்வு செயல்முறை மூலம் பயனர்கள் IFTV ஐக் கட்டுப்படுத்தலாம்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

BSNL: புதுச்சேரி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புதிய சேவையை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்!



Source link