வெயாங்கொடை, வந்துராவ ரஜமஹா விகாரைக்கருகில் புதையல் தோண்டுவதற்கான அகழ்வாராய்ச்சியில் அரசாங்கம் ஈடுபடவில்லையென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த சந்திப்பில், அத்தனகல்லை நீதவானின் உத்தரவிற்கு அமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதையல் அல்லது தொல்லியல் மதிப்புள்ள பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல், இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
The post புதையல் தோண்டும் செயற்பாட்டில் அரசு ஈடுபடவில்லை appeared first on Thinakaran.