பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸலை புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்துள்ளது. இவரது வெற்றியின் ஊடாக புத்தளம் தொகுதி 35 வருடங்களின் பின்னர் தேசிய கட்சியின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அதன் நிமித்தம் தேசிய மக்கள் சக்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் பைசலையும் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளைத் தலைவர் அஷ் ஷெய் எம்.எம்.எம்.
மிஹ்ளார், செயலாளர் அஷ் ஷெய்க் ஏ.ஏ. முஜிபுர் ரஹ்மான் மற்றும் அஷ் ஷெய்க் சன்ஹிர் ஆகியோர் இணைந்து நினைவு சின்னம் வழங்கி வைப்பதையும் வைபவத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
The post புத்தளம் பைஸல் எம்.பிக்கு கௌரவிப்பு appeared first on Thinakaran.