Last Updated:

Redmi 14C 5G | ரெட்மி 14சி 5ஜி மாடலில் சிம்ஸ்லாட் போனில் இடது பக்கம் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் மற்றும் பவர் பட்டன் ஆகியவை ஃபோனின் வலது பக்கம் பொருத்தப்பட்டுள்ளன.

News18

புத்தாண்டை முன்னிட்டு வரும் ஜனவரி 2025ல் ரெட்மி ஏற்கனவே அறிவித்ததுபோல், தனது புதிய மாடலான ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை யூசர்கள் வாங்கி பயன்படுத்த முடியும். ஏற்கனவே வெளிவந்த ரெட்மியின் 14ஆர் 5ஜி மாடலை மறு உருவாக்கம் செய்து, இந்த புதிய ரெட்மி 14சி 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் போனை வாங்க விரும்புபவர்கள் அமேசான் இ-காமர்ஸ் வலைத்தளம் மூலமாகவும், ரெட்மியின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர் மூலமாகவும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த போனுக்கான ப்ரோமோ போஸ்டர்களை ரெட்மி வெளியிட்டபோதே உலக அளவில் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்ததால், இந்த ஸ்மார்ட்போனை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதன் 50 எம்பி ப்ரைமரி கேமரா செட்டப்தான் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக இருக்கும் என கருதப்படுகிறது.

பிராசஸரை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 4th ஜென் 2 எஸ்ஓசி சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக லேகிங் போன்ற பிரச்சனைகள் பெரிதாக இல்லாமல், மிகவும் ஸ்மூத்தான ஒரு அனுபவத்தை யூசர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் கேமிங், மல்டிமீடியா, எண்டர்டெயின்மென்ட் என மல்டி டாஸ்கிங் செய்பவர்களுக்கும் மிகவும் ஸ்மூத்தான செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 5160mAh திறன் கொண்ட கொண்ட அதிக திறன் வாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட்ஸ் திறன் கொண்ட வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.6 இன்ச் அளவு கொண்ட 120HZ எச்டி பிளஸ் எல்சிடி திரை இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹைப்பர் ஓஎஸ் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சந்தையில் விற்பனைக்கு வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் எல்இடி தொழில்நுட்பத்தில் அமைந்த திரையை கொண்டு வெளிவரும் இந்த நேரத்தில், எல்சிடி திரை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சரியான அணுகுமுறை தானா என்பது விவாதத்திற்கு உரியது.

இதையும் படிக்க: ஆப்பிள் ஐபோன்16 ப்ரோ மீது பெரும் தள்ளுபடி… சிறந்த வாய்ப்பை தவறவிடாதீங்க…!

கேமராவை பொறுத்தவரை 50 எம்பி அளவுடைய ப்ரைமரி கேமராவும், 5எம்பி அளவிலான செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த ரெட்மி 14ஆர் 5ஜி மாடல் 13எம்பி அளவிலான மெயின் கேமராவும் 50 எம்பி அளவிலான செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒளி குறைந்த இடங்களில் புகைப்படம் எடுக்க உதவியாக எல்இடி ப்ளாஷ் வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் பிளான்கள்… வோடஃபோன் ஐடியாவின் புதிய அறிமுகம்..!

ரெட்மி 14சி 5ஜி மாடலில் சிம்ஸ்லாட் போனில் இடது பக்கம் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் மற்றும் பவர் பட்டன் ஆகியவை ஃபோனின் வலது பக்கம் பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு, நீலம் மற்றும் ஊதா என்ற மூன்று விதமான நிறங்களில் இது விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link