Last Updated:
அடுத்த சில வாரங்களில் அவர் கார் ரேஸில் பிஸியாகி விடுவார் என்று கூறப்படுகிறது. சிறிது காலம் படங்களுக்கு பிரேக் எடுத்துக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்
நடிகர் அஜித்குமார் 2025 புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக விமான நிலையம் வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். அஜித் உற்சாகத்துடன் காணப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. அஜித் தற்போது ‘விடாமுயற்சி‘ மற்றும் ‘குட் பேட் அக்லி‘ ஆகிய 2 படங்களை முடித்துக் கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் டப்பிங் சில நாட்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது.
இவற்றில் ‘விடாமுயற்சி‘ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாக சற்று காலதாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவினாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தினுடைய டிரைலரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
#JUSRIN சென்னையில் இருந்து சிங்கப்பூர்
செல்லும் நடிகர் அஜித் குமார்#Ajith #AK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/6qsiibCHy8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 31, 2024
மற்றொரு படமான ஆதித் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி‘ திரைப்படத்தில் அஜித் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘விடாமுயற்சி‘ மற்றும் ‘குட் பேட் அக்லி‘ திரைப்படங்களை முடித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக அஜித் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க – Web series 2024 | போரடிக்காத இந்த தமிழ் வெப்சீரிஸ்களை மிஸ் பண்ணிடாதீங்க…!
அவர் சிங்கப்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களில் அவர் கார் ரேஸில் பிஸியாகி விடுவார் என்று கூறப்படுகிறது. சிறிது காலம் படங்களுக்கு பிரேக் எடுத்துக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.
December 31, 2024 6:45 PM IST