Last Updated:

பும்ரா ஓவரில் 4,6,4 என பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் சாம். அதிலும் ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சிக்சருக்கு விளாசினார்.

News18

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், 1 – 1 என்ற நிலையில் தொடர் சமனில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்தது. மூன்றாவது போட்டி கப்பாவில் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.

இந்த நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், “பும்ராவை சமாளிக்க திட்டம் இருக்கிறது” என 19 வயது ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் கூறியது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகாத ஒரு வீரர், உலகின் தலைசிறந்த பவுலர்களின் ஒருவரான பும்ராவை சமாளிப்பேன் என சொன்னதை பலரும் ஆணவமாகவே பார்த்தார்கள்.

ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், விமர்சகர்களை சாம் கோன்ஸ்டாஸ் வாயடைக்க வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். டெஸ்ட் போட்டியை டி20 போட்டியைப்போல அணுகினார் சாம் கோன்ஸ்டாஸ்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்… இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம்…

பும்ரா ஓவரில் 4,6,4 என பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் சாம். அதிலும் ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சிக்சருக்கு விளாசினார். பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். எங்களால் இதை நம்ப முடியவில்லை என ரவி சாஸ்திரி, கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்கள் கமெண்டரியில் தெரிவித்தனர்.

2021ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் பும்ரா ஓவரில் சிக்சர் அடிக்கும் முதல் பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ் தான். பும்ராவை சமாளிக்க திட்டம் இருப்பதாக பேச்சுடன் நிற்காமல், மைதானத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டு சென்றுள்ளார் சாம் கோன்ஸ்டாஸ்.

மேலும் இடைவெளியின்போது, “பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்வேன் என்றும், அவர் கம்பேக் கொடுப்பார் என நினைக்கிறேன்” என்றும் சாம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

65 பந்துகள் விளையாடிய அவர், 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 60 ரன்களை எடுத்து, அறிமுகப்போட்டியில் அரைசதம் விளாசிய 2ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.



Source link