Last Updated:
2021ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் பும்ரா ஓவரில் சிக்சர் அடிக்கவில்லை என்கிற சாதனைக்கு தனது பேட்டிங்கால் முற்றுப்புள்ளி வைத்தார் சாம் கான்ஸ்டாஸ்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அறிமுக வீரராக கவனம் ஈர்த்த ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது குடும்பத்துக்கு நேர்ந்த சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கவனம் ஈர்க்கும் வீரராக இருந்தவர் ஆஸ்திரேலிய அணியின் சாம் கான்ஸ்டாஸ். 19 வயது இவர், இந்த தொடரின் மூலமாக தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டி மூலமாக அறிமுகமான இவர், தனது அறிமுகத்தின்போதே உலகின் தலைசிறந்த பவுலர்களின் ஒருவரான பும்ராவை சமாளிப்பேன் எனக் கூறி அதை செய்தும் காட்டினார்.
அந்தப் போட்டியில் பும்ரா ஓவரில் 4, 6, 4 என பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் சாம். அதிலும் ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சிக்சருக்கு விளாசினார். பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். “எங்களால் இதை நம்ப முடியவில்லை” என ரவி சாஸ்திரி, கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்கள் கமெண்டரியில் தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் பும்ரா ஓவரில் சிக்சர் அடிக்கவில்லை என்கிற சாதனைக்கு தனது பேட்டிங்கால் முற்றுப்புள்ளி வைத்தார் சாம் கான்ஸ்டாஸ். இதன்பின் களத்தில் ஆக்டிவாக இருந்து, இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்வது, விராட் கோலியுடன் மோதல் உண்டானது என பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கவனம் ஈர்த்தார்.
விராட் கோலி மற்றும் பும்ரா மோதலுக்காக இந்திய வீரர்கள் இவரை வசைபாடினாலும், “விராட் கோலி தற்செயலாக என் மீது மோதினார். அதுதான் கிரிக்கெட். இது போன்ற விஷயங்கள் விளையாட்டில் நடக்கலாம். உணர்ச்சி மிகுதியாக இருக்கும்போது நாங்கள் அப்படி நடந்துகொண்டோம். இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி.” என்று கூறி கான்ஸ்டாஸ் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.
Also Read | பேசுபொருளான தேசிய கீதம் – எப்போது இசைக்க வேண்டும்? – அரசியல் சாசன விதி சொல்வது இதுதான்!
இந்நிலையில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் போட்டியாக நடந்தது. இந்தப் போட்டியின் போது தனது குடும்பத்துக்கு நேர்ந்த சோகத்தை சாம் கான்ஸ்டாஸ் பகிர்ந்து கொண்டார்.
அதில், “இந்தப் போட்டிக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உள்ளது. புற்றுநோயால் எனது குடும்பத்தை இழந்தவன் நான். எனது மைத்துனர் ரத்த புற்றுநோயாலும், எனது தாத்தா குடல் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள். எனவே, இந்த போட்டி மூலமாக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
January 07, 2025 10:06 AM IST