ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில், ‘ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும்,” எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் கூறியுள்ளார்.

 



Source link