தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்க தீர்மானித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் முழு கவனம் செலுத்தியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பெசிர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் முக்கியமான பரீட்சை எனவும், பரீட்சையில் வழங்கப்படும் ஒவ்வொரு சித்தியும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, கிராமப்புற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கு இதுவே ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இந்தத் பரீட்சையில் ஏதேனும் அநீதி நடந்தால், அது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்துக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.



Source link