சந்தையில் புளிக்குப் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க வேண்டியுள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் ஒரு கிலோ புளி, இன்று (12) 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Source link