இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.
புஷ்பா பாகம் ஒன்றை விடபுஷ்பா 2 வில்நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்இயக்குநர் சுகுமார். ட்ரெய்லர் மற்றும் டீசரை பார்க்கும்போது படத்தின் மொத்தக் கதையையும்மாற்றி இருக்கிறார் போல் தெரிகிறது. புஷ்பா பார்ட் 1 படத்தில் கடத்தல் கும்பல் தலைவனாக இருந்த புஷ்பராஜ், இந்த இரண்டாம் பாகத்தில் சர்வதேச அளவில் கடத்தல் தலைவனாக இருப்பார் எனத் தெரிகிறது.
புஷ்பா முதல் பாகத்தின் பட்ஜெட்ரூ.250 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தின் வெற்றியால்இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர். புஷ்பா பாகம் ஒன்றிற்கு தேவிஸ்ரீபிரசாத் மட்டுமே இசையமைத்துள்ளார். ஆனால் இதன் இரண்டாம் பாகத்தை தேவி ஸ்ரீ பிரசாத் தவிர இதன் பின்னணி இசையை தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்து உள்ளனர்.
இதையும் வாசிக்க : 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் புஷ்பா 2 திரைப்படம் : ரசிகரிகளின் எதிர்பார்ப்பு என்ன ?
புஷ்பா 1 படம் 3 மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாக இருந்தது. ஆனால் புஷ்பா 2 படம் 3 மணி நேரம் 21 நிமிடம் இருக்கிறது என்று சென்சார் போர்டு அறிவித்துள்ளது. குறிப்பாக புஷ்பா பாகம் இரண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ்களிலும் வெளியாகிறது. உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.