புதுவை லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் பெங்களூர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது இந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க இண்டிகோ நிறுவனம் முன் வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டது.

புதுச்சேரி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக பிரத்யோக அலுவலக அறைகள், தொழில்நுட்ப அறைகள், இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.

விளம்பரம்

Gold rate: ஒரே நாளில் சர்ரென குறைந்த தங்கம் விலை.. இன்று தங்கம் வாங்கினால் ஜாக்பாட் தான்

இந்நிலையில் அடுத்த மாதம் டிசம்பர் 20ஆம் தேதி முதல் புதுவையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 72 இருக்கைகள் கொண்ட விமானம் இயங்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.05 மணிக்கு புதுவைக்கு விமானம் வந்து சேரும்.புதுவையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்று சேரும்.

விளம்பரம்

அங்கிருந்து மாலை 03 .05 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 04.05 மணிக்கு புதுவை வந்து சேரும். புதுவையில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்படும் விமானம் 06.35 மணிக்கு பெங்களூர் சென்றடையும் இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவல்களை புதுவை விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link