பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் டிச. 15ஆம் திகதி வரை இடம்பெற்றது.
அந்த வகையில் பிரிடோ நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தில் தோட்டபுற மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்த வந்த நிலையில் நேற்றையதினம் பிரிடோ நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில், பிரிடோ பெண்கள் வலய அமைப்பின் ஏற்பாட்டில் அட்டனில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி கலந்துக் கொண்டார்.
வீட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுத்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் முகங்கொடுக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்தத் திட்டம் ஊடாக பிரயோக ரீதியாக செயற்பட வேண்டும் என இதன்போது கலந்துக் கொண்ட பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்வில் அட்டன் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவு அதிகாரி, கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோர்கள், சகோதர நிறுவன அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.
ஹட்டன் சுழற்சி நிருபர்
The post பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு appeared first on Thinakaran.