Last Updated:
பெண்களுக்கு வழங்கப்படும் பர்சனல் லோன்களை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து பார்க்கலாம்.
பொருளாதார சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவது சம்பந்தமாக அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துள்ளது. அதேபோல் தனியார் மற்றும் அரசு வங்கிகள் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சில கடன்களை வழங்கி வருகின்றனர். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பர்சனல் லோன்கள் குறைவான வட்டி விகிதத்தில் எளிமையான திருப்பி செலுத்தும் திட்டத்தோடு கொடுக்கப்படுகிறது. சிறிய தொழில் துவங்குவது முதல் வீட்டை புதுப்பிப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பெண்கள் இந்த கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்களுக்கு வழங்கப்படும் பர்சனல் லோன்களுக்கான தகுதி வரம்பு:
- வயது : இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
- வேலை : விண்ணப்பதாரர் மாத வருமானம் பெறுபவர் அல்லது சுய தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
- பணி அனுபவம் : விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் தற்போதைய வேலையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருத்தல் அவசியம்.
- கடன் பெறுபவர் : இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். வயது மற்றும் வேலை அனுபவமானது கடன் வழங்குனரின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.
பெண்களுக்கான பர்சனல் லோன்களுக்கு தேவைப்படும் டாக்குமென்ட்கள்:
- சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
- அடையாள சான்றிதழாக PAN கார்டு.
- முகவரி சான்றிதழுக்கு ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம்.
- வேலை அல்லது பிசினஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சமீபத்திய பேங்க் ஸ்டேட்மென்ட் (வழக்கமாக கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்).
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் லெண்டிங் பிளாட்பார்ம் மூலமாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் நேரடியாக வழங்க தேவையில்லை. இதற்கான செயல்முறை 100% ஆன்லைனில் நிறைவு செய்து தரப்படும்.
பெண்களுக்கான பர்சனல் லோன் விண்ணப்ப செயல்முறை:
பல இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் விண்ணப்ப செயல்முறையை விரைவாகவும் எந்த ஒரு தொந்தரவு இல்லாமலும் பெண்களுக்கு செய்து கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில அடிப்படை ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, பெண்கள் இந்த கடனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்தவுடன் கடன் வழங்குனர் அதனை ஆய்வு செய்து, அப்ரூவலுக்காக அதனை ப்ராசஸ் செய்வார். பர்சனல் லோனுக்கான அங்கீகரிப்பு நேரம் என்பது ஒரு சில நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: வட்டி விகிதங்கள்:
பெண்களுக்கு பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனினும் வட்டி விகிதமானது கடன் பெறுநரின் கிரெடிட் ஸ்கோர், வேலை, வயது, லோன் தொகை மற்றும் லோன் கால அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம்.
பெண்களுக்கான பர்சனல் லோன்: கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு எவ்வளவு கடன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
- உங்களுக்கு தேவையான தொகையை முடிவு செய்த பிறகு உங்களுடைய சேமிப்பு மற்றும் செலவுகள் போக எவ்வளவு தொகையை EMI ஆக செலுத்த முடியும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
- கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் கடன் ஆஃபர்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.
January 03, 2025 12:12 PM IST
பெண்களுக்கு வழங்கப்படும் பர்சனல் லோன்கள் பற்றி தெரியுமா..? இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? – விவரம்!