மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இது பற்றிய விவரத்தை அளிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, CSS (ஓய்வூதியம்) விதிகள், 2021ன் விதி 50 (15)ஐ மேற்கோள்காட்டிய அலுவலக குறிப்பாணையில், ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4ல் அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதில் வாழ்க்கை துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் அடங்கும்.

விளம்பரம்

Also Read:
இன்றே கடைசி நாள்.. GPay வாடிக்கையாளர்களே ரெடியா? ரூ.1001 கேஷ்பேக் வேணுமா? அப்ப இத பண்ணுங்க!

மேலும், அரசுப் பணியாளர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வூதியத் தாள்களுடன் மீண்டும் படிவம் 4-ல் குடும்பத்தின் புதுப்பித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் இருந்து மகளின் பெயரை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி குறிப்புகள் வந்ததாக அலுவலக குறிப்பாணை தெரிவித்தது. ஓய்வூதியத்திற்கு தகுதி உடையவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெளிவுபடுத்தியுள்ளது. ​​

விளம்பரம்

அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரது மகள் கருதப்படுகிறார். ஆகையால், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் மகளின் பெயர் சேர்க்கப்பட்டுதான் இருக்கும். குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி, ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு தற்போதுள்ள விதிகளின்படி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமனி அடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 எளிய குறிப்புகள்.!


தமனி அடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 எளிய குறிப்புகள்.!

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதி – குழந்தைகளில் ஓய்வூதியத்தில் யாருக்கு முதல் உரிமை?

  • ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் இறந்தால், கணவரை இழந்த விதவை அல்லது மனைவியை இழந்த கணவன் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெற இறந்த நபரின் கணவனோ மனைவியோ இல்லாதபோது, அது குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

  • 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது திருமணம் ஆகும் வரை அல்லது ரூ. 9,000/- + DA என்ற மாத சம்பளத்திற்கு மேல் ஊழியரின் குழந்தைகள் சம்பாதிக்கத் தொடங்கும்போது, இவற்றில் எது முதலில் நடக்கிறதோ, அது வரை குடும்ப ஓய்வூதியம் இறந்த ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

  • அரசு ஊழியரின் மகன் அல்லது மகள், மனநலம் குன்றியவராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருந்தால், 25 வயதை எட்டிய பிறகும் அவர் வாழ்வாதாரம் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

  • நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செலுத்தப்படும்.

  • ஓய்வூதிய விதியின்படி, அரசு ஊழியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் அவர்களுக்குத்தான் முதல் உரிமை கிடைக்கும்.

.



Source link