ஜியோ நிறுவனம், ஜியோ போன் பிரிமா 2 என்ற புதிய வகை போனை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு பேசிக் மாடல் போன் போல் இருக்கும் இந்த பிரிமா 2 தற்போது இருக்கும் ஸ்மார் போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டது. குறிப்பாக இந்த போனின் வடிவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
பழைய பேசிக் மாடல் போன் போல் இருக்கும் இந்த பிரிமா 2 போன் எந்த ஒரு மூன்றாவது செயலியின் உதவியுமின்றி வீடியோ கால் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜியோ போன் பிரிமா 2, 4ஜி சேவையை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், யூடியூப், பேஸ் புக், கூகுள் அஸிஸ்டண்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஜியோ டிவி, ஜியோ சாவன், ஜியோ நியூஸ், ஜியோ சினிமா உள்ளிட்டவற்றை இந்த போனில் உபயோகிக்க முடியும். ஜியோ பே மூலம் இந்த போனில் பணப்பரிவர்த்தனையும் செய்யலாம். சிறப்பு ஜியோ சாட் மூலம், குறுஞ்செய்தி அனுப்புவது, க்ரூப் சாட் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். மேலும், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்துக்கொள்ளலாம். அதேபோல், இந்தப் போனில் இருக்கும் ஜியோ ஸ்டோரில் பல்வேறு செயலிகளையும் பயனர்கள் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் :
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் பயனர்களுக்கு பாதுகாப்பு சிக்கல்? அலர்ட் கொடுக்கும் மத்திய அரசு!
இதன் பட்டன்கள் மிகவும் மிருதுவாக உபயோகிப்பதற்கு எளிமையானதாக இருக்கிறது. KaiOS, Qualcomm processor ஆகியவற்றைக் கொண்ட இந்த ஜியோ போன் பிரிமா 2, 2.4 இன்ஞ் திரை, 512 எம்.பி. ராம், 4 ஜி.பி. இண்டனல் மெமரி மற்றும் 128 ஜி.பி. வரையிலான மெமரிகார்டு மெமரி வசதி கொண்டது. இதன் பேட்டரி திறன் 2000 mAh ஆக இருக்கிறது. இந்த ஜியோபோன் பிரிமா 2-ல் டிஜிட்டல் செல்ஃபி கேம்ரா, ப்ளூடூத், வைபை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்தப் போனில் ஆங்கிலம் உட்பட 22 இந்திய மொழியை பயன்படுத்தும் வசதி உள்ளது.
தற்போது இந்த ஜியோபோன் பிரிமா 2வின் விலை ரூ. 2799 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான விலையில் இத்தனை அம்சங்களுடன் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் வந்திருக்கும் இந்த ஜியோபோன் பிரிமா 2 வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
.