Last Updated:

Pongal Sale: பொங்கலுக்கு வாழைத்தார் சீர் கொடுக்கும் நிலையில் மார்க்கெட்டில் இன்று விலையேறியுள்ளது.

X

Pongal

Pongal Sale: பொங்கலுக்கு சீர் கொடுக்கும் பாரம்பரியம்… விர்ரென விலையேறிய வாழைத்தார்…

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் வழக்கமாகச் சுபதினங்கள், முக்கியமான வழிபாடுகள் நடைபெறும் தினங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிப்பதால் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயரும்.

ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டியும் காய்கறிகளின் விலையில் பெரிதளவில் மாற்றமின்றி கட்டுப்பிடி ஆகும் விலையிலேயே விற்பனையாகின்றது. ஆனால் முருங்கைக்காய் மட்டும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதாவது 1 கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய் வரை விற்பனையாகின்றது.

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு நாட்டுக் காயான தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மார்க்கெட்டிற்கு வருகிறது.

இதையும் படிங்க: Best Time for Pongal: பொங்கலோ பொங்கல்… சூரிய பொங்கலா? மகர பொங்கலா? எந்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறந்தது…

ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

மேலும், வாழைக்காய் மற்றும் வாழைத்தார் விலையுர்ந்து காணப்படுகிறது. இது குறித்து வாழைத்தார் விற்பனையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “பொங்கல் பண்டிகைக்குச் சீர் கொடுக்கத் தேவைப்படுவதால் வாழைத்தாரின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

செவ்வாழை தார் 1300க்கு மேல் விற்பனை ஆகின்றது. நாட்டு வாழைத்தார் 700 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின்றது. சாதாரணமாக 300 ரூபாய் வரை விற்பனையாகும் வாழைத்தார் இன்று 700 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link