Last Updated:

புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி (Vidaamuyarchi) படத்தின் டிரைலர் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என இன்று மாலை முதல் தகவல்கள் பரவின.

News18

விடாமுயற்சி (Vidaamuyarchi)படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் இன்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், பொங்கலையொட்டி விடாமுயற்சி படம் வெளியாகாது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்திற்கான டப்பிங் பணியை அஜித் சமீபத்தில் முடித்தார். இதேபோன்று மற்றொரு படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டப்பிங்கையும் அஜித் முடித்துக் கொடுத்தார். இந்த 2 படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது என்பதால் விடாமுயற்சி முதலில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான சவதீகா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என இன்று மாலை முதல் தகவல்கள் பரவின.

இதையும் படிங்க – விடாமுயற்சி ரிலீஸ் குறித்து இணையத்தில் பரவும் தகவல்… அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி…

இந்நிலையில் பொங்கலையொட்டி விடாமுயற்சி படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக லைகா தெரிவித்திருக்கிறது.

லைகாவின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஜனவரி கடைசி வாரத்தில் விடாமுயற்சி வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





Source link