தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொறுப்பு கூடியுள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘கர்ணா’, ‘முதல்வன்’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. 1992 ஆம் ஆண்டு வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அர்ஜுன், இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார்.
திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த அர்ஜுனுக்கு, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதேபோன்று, ‘சின்னதம்பி’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பி.வாசுவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
Also Read | நயன்தாரா, விக்கி காதல்.. தனுஷ் சொன்னது என்ன? – டாக்குமென்ட்டரியில் வெளிப்படுத்திய ராதிகா
இதன்பிறகு பேசிய அர்ஜுன், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொறுப்பு கூடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கவுரவத்தை நியாயப்படுத்துவதற்காக நல்ல மனிதனாக இருப்பேன் என்றும் அர்ஜுன் கூறியுள்ளார்.
.