Last Updated:

பரப்புரை மேற்கொள்ளப்பட்டதை போன்று இந்த வதந்தி பரவியதால் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒரு கட்டத்தில் தான் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பதற்கு மருத்துவ ஆய்வுகளையும் செய்திருந்தார்

News18

போதை பழக்கத்திற்கு வாரிசு நடிகை ஒருவர் அடிமையானதாக தகவல்கள் பரவின. இதனால் அவரது தாயும் குடும்பத்தினரும் மிகப்பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகவும் ஈர்ப்பு நிறைந்த துறையாக சினிமா உலகம் உள்ளது. இங்கு மிக எளிதில் நடிகர் நடிகைகள் புகழின் உச்சத்திற்கு சென்று விடுகிறார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தனது குடும்பத்தினர் ஏற்கனவே சினிமா துறையில் இருக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு எளிதில் அறிமுகம் கிடைப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மூத்த நடிகையான ஹேம மாலினிக்கு பிறந்த ஈஷா தியோல் என்ற நடிகை இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தார்.

வாரிசு நடிகையாக கருதப்பட்ட இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அபாரமான நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈஷா தியோல் பெற்றிருந்தார். அவர் புகழின் உச்சத்தில் இருந்தபோது போதைப் பொருளுக்கு அடிமையானதாக தகவல்கள் பரவின. இது அவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் மனதளவில் மிக கடுமையாக பாதித்தது.

பரப்புரை மேற்கொள்ளப்பட்டதை போன்று இந்த வதந்தி பரவியதால் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒரு கட்டத்தில் தான் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பதற்கு ஈஷா தியோல் மருத்துவ ஆய்வுகளையும் செய்திருந்தார். இதில் அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகவில்லை என்று ரிப்போர்ட் வெளிவந்தது.

இதையும் படிங்க – L2: Empuraan | மலையாளத்தின் அடுத்த பிரமாண்டம் – மோகன்லாலின் ‘எம்புரான்’ டீசர் எப்படி?

இருப்பினும் வதந்தியால் அவர் பெற்ற காயங்கள் அவரது குடும்பத்தினரை கடுமையாக பாதித்தது. அதற்கு முன்னதாக ஹேமமாலினியை போன்று ஈஷா தியோலுக்கு நடிப்பு வரவில்லை என்றும், அவர் அளவுக்கு இவரிடம் அழகு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட நடிப்பு அனுபவங்கள், வதந்திகளால் பாதிக்கப்பட்ட விதம் குறித்து ஈஷா தியோல் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தகவல்களை பகிர்ந்து உள்ளார்.



Source link