Last Updated:

தன்னை பற்றிய தவறான செய்திகள் பரப்புவதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

பும்ரா

உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்தார். சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் பந்து வீசய போது காயம் ஏற்பட்டதால் பும்ரா போட்டியின் பாதியில் வெளியேறினார். 2வது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை. பும்ராவிடம் மேற்கொண்ட மருத்துவ சோதனையில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இதனிடையே ஆங்கில பத்திரிகை ஒன்றில், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பும்ராவுக்கு முதுகில் வீக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த வீக்கம் குறையும் வரை படுக்கையில் ஓய்வில் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பிசிசிஐ-ன் தகுதி மேன்மை மையத்தில் அவர் செல்ல இருந்தாலும் அவருக்கான தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பும்ரா, “போலியான செய்திகள் எளிதாக பரவும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற செய்திகள் எனக்கு சிரிப்பை தான் வரவைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பின் பேசிய பும்ரா, “சிறிது சங்கடமாக தான் உள்ளது. சில நேரங்களில் நமது உடல்நிலைக்கு மதிப்பு கொடுக்க தான் வேண்டும். நமது உடல்நிலையை எதிர்த்து சண்டை போட முடியாது. முடிவு சற்று ஏமாற்றமாக தான் உள்ளது. சில சமயங்களில் இதுபோன்ற ஏமாற்றங்களை கடந்து முன்னேறி சென்று தான் ஆகவேண்டும்” என்றார்.

இந்திய அணி வீரர்களில் 3 பார்மேட் போட்டிகளிலும் விளையாடும் ஒரே வீரராக பும்ரா உள்ளார். இங்கிலாந்து தொடரில் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா ஓய்வில் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் இங்கிலாந்து தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பது தற்போது வரைக்கும் கேள்வி குறியாகவே உள்ளது.





Source link