Last Updated:
Mysskin | சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பாட்டல் ராதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மிஷ்கினுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பாட்டல் ராதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மிஷ்கினுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் அருள்தாஸ் மேடையில் பேசும்போது, “சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ பட நிகழ்வில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதை பார்த்து மிக வருத்தமாக இருந்தது.
அவரை பல மேடைகளில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல ஜாம்பவான்கள், தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மேடைக்கு வந்து சென்றுள்ளனர். மிஷ்கின் மிக அநாகரிகமாக பேசியது மிக வருத்தமாக இருந்தது. மேடை நாகரிகம் என ஒன்று உள்ளது. அங்கு வந்து கொச்சையான வார்த்தைகளை உபயோகிப்பது ஏற்புடையதாக இல்லை.
பல உலக சினிமாவை பார்க்கிறேன் என கூறுகின்றார். உங்களுக்கு ஒரு மேடை நாகரிகம் தெரியாதா என்ன? பல புத்தகங்களை படிப்பதாக கூறும் நீங்கள் ஒரு போலி அறிவாளி. யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச?.
இதையும் வாசிக்க: OTT Spot | கடைசி அரைமணி நேர சம்பவம்..நொடிக்கு நொடி விறுவிறுப்பு..ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன்.. இந்த படத்தை பாத்திருக்கீங்களா?
மேடையில் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் என பலரும் உள்ளனர் அவர்கள் முன்னிலையில் அப்படி பேசியது அருவருப்பாக இருந்தது. நீங்கள் ஒன்றும் சுசீந்திரன் போல மண்சார்ந்த படங்களை எடுத்து வரவில்லை. குத்தாட்டம் பாடல்களை வைத்து வந்தவர் தான் நீங்கள்.
இயக்குநர் பாலா 25 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கும் அப்படித்தான் அவரை குடித்துவிட்டு படுத்து கிடந்தான் பாலா என்று பேசினார். அதேபோல ‘பாட்டல் ராதா’ நிகழ்ச்சி மேடையில் இளையராஜாவை அவன் இவன் என பேசியது அசிங்கமாக இருந்தது. அன்றைய நிகழ்ச்சியில் வெற்றிமாறன் குடிப்பார், அவர் இவர் குடிப்பார் என மிஷ்கின் கூறினார். அவர்கள் குடிக்காமல் கூட இருந்திருக்கலாம். நீங்கள் என்ன ஊற்றியா குடுத்தீர்கள்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
January 22, 2025 6:37 PM IST