Last Updated:
வாட்ஸ்அப் தற்போது கூகுளின் உதவியுடன் போலியான செய்திகள் மற்றும் பொய்யான தகவல்களை கண்டுபிடிப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு கூகுளில் இமேஜ்களை தேடுவதை ரிவர்ஸ் செய்வதற்கான திறனை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. தற்போது இதையே வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் தற்போது கூகுளின் உதவியுடன் போலியான செய்திகள் மற்றும் பொய்யான தகவல்களை கண்டுபிடிப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு கூகுளில் இமேஜ்களை தேடுவதை ரிவர்ஸ் செய்வதற்கான திறனை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. தற்போது இதையே வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு வாட்ஸ்அப் எந்த ஒரு சோதனையும் இல்லாமல் கன்டென்ட், இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை பிறருக்கு ஃபார்வேர்ட் செய்வதற்கு அனுமதித்தது. இதனால் போலியான மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய விஷயங்கள் பிறருக்கு ஷேர் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கருவியை பயன்படுத்தி நீங்கள் போலியான கன்டென்ட் அல்லது இமேஜ்களை அடையாளம் கண்டு, அவற்றின் உண்மையை கண்டறியலாம்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?:
இந்த கருவி சம்பந்தப்பட்ட தகவல்கள் WatBetaInfo மூலமாக நமக்கு கிடைத்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வாட்ஸ்அப் ஏற்கனவே இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டில் பீட்டா டெஸ்டிங் மூலமாக சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவியாக இருப்பதற்காக இந்த வெப் டூல்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான படிகளையும் ஷேர் செய்துள்ளது.
இதற்கு சாட் ஸ்கிரீனின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி கொண்ட மெனுவில் ஒரு புதிய ஆப்ஷன் சேர்க்கப்படும். ஏதாவது ஒரு இமேஜை கிளிக் செய்து வெப் ஆப்ஷனில் உள்ள சர்ச் என்பதை டேப் செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது கூகுள் அந்த உண்மையான இமேஜை டேட்டா பேஸில் தேட ஆரம்பிக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த கருவியை பயன்படுத்தி இமேஜுக்கான அதிக தகவலை தேடும் போது இந்த குறிப்பிட்ட கன்டென்ட் அல்லது மெசேஜ் கூகுளில் அப்லோடு செய்யப்படும் என்பதை யூசர்களுக்கு வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. மேலும் இந்த சாட் பிறருக்கு ஷேர் செய்யப்படாது அல்லது வாட்ஸ்அப்பில் சேமிக்கப்படாது. சர்ச் பட்டனை அழுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட அந்த இமேஜ் சம்பந்தப்பட்ட உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.
இதன் மூலமாக நீங்கள் தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களை பயன்படுத்தி டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்ய வேண்டிய தேவையை இந்த புதிய அம்சம் நீக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட Adobe Scan, CamSanner மற்றும் உங்களுடைய போனின் கேமரா மூலமாக செயல்படும் டிஃபால்ட் ஸ்கேனரை போலவே வேலை செய்கிறது.
இதையும் படிக்க: சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா விலை 51 சதவீதம் குறைகிறது… வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்த அம்சம் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு வேலை இந்த அம்சத்தை இன்னும் நீங்கள் பெறவில்லை என்றால் வரக்கூடிய வாரங்களில் லேட்டஸ்ட் அப்டேட் மூலமாக அதனை எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் குறிப்பாக மல்டி டாஸ்கிங் செய்பவர்கள் அல்லது அடிக்கடி ஃபைல்களை ஷேர் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
December 31, 2024 5:33 PM IST