ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்கள் மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. SBI சார்ந்த சில தவறான டீப்ஃபேக் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருவதாக எஸ்பிஐ தனது எச்சரிக்கை போஸ்ட்டில் தெரிவித்துள்ளது.

தற்போது சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் வைரலாகி வரும் குறிப்பிட்ட வீடியோக்களில் SBI வங்கியின் மூத்த அதிகாரிகள் காட்சியில் தோன்றுகின்றனர். இந்த வீடியோக்களில் தோன்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள் சில முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ கூறுவது போல வீடியோக்கள் அமைந்துள்ளன.

விளம்பரம்

ஆனால், இந்த வீடியோக்கள் பொய்யானவை என்று எஸ்பிஐ தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான வீடியோ. தங்கள் வங்கியோ அல்லது அதன் அதிகாரிகளோ வீடியோக்களில் கூறுவது போன்ற திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று எஸ்பிஐ தெளிவாக கூறியுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்:

இது போன்ற மோசடிகளை தவிர்க்க, இந்த வீடியோக்களை நம்ப வேண்டாம் என்ற மக்களுக்கு எஸ்பிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. SBI ஷேர் செய்துள்ள போஸ்ட்டில் “எச்சரிக்கை, பொது எச்சரிக்கை, டீப்ஃபேக் வீடியோக்கள் ஜாக்கிரதை. அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கிறது. சில முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறி வங்கியின் உயரதிகாரிகளின் முகம் அடங்கிய டீப்ஃபேக் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரப்பப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
800க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…? விரிவான தகவல்…

தாங்கள் குறிப்பிடும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருவதாகவும், இந்த வீடியோவில், வங்கியின் மூத்த அதிகாரிகள் சில முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பது அல்லது ஆதரிப்பது போன்று பேசும் வகையிலும் காட்சிகள் உள்ளன. ஆனால், இது டீப் ஃபேக் வீடியோக்கள் ஆகும். பார்ப்பதற்கு உண்மையில் வங்கியின் மூத்த அதிகாரிகள் பேசுவதைப் போலவே தோன்றும். ஆனால் AI மற்றும் டீப் லெர்னிங் டெக்னிக்ஸ்களுடன் மாற்றப்பட்ட போலி வீடியோக்கள் என்றும், இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

டீப்ஃபேக் வீடியோக்கள் என்றால் என்ன?

டீப்ஃபேக் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் ஆகும். ஆனால், பார்ப்பதற்கு போலி வீடியோ என்பதே தெரியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமான வீடியோக்களாக இருக்கும் இவை, ஒரு நபரின் முகத்தையோ, குரலையோ ரீபிளேஸ் செய்ததாக இருக்கும் அல்லது மாற்றப்பட்டதாக இருக்கும். இதனால் அவர்கள் சொல்லாததை அல்லது செய்யாததை செய்வது போல் அல்லது சொல்வது,போல் தோன்றும்.

இதையும் படிக்க:
வங்கி ஊழியர்களுக்கு 5 நாள் வேலை வாரம் எப்போது செயல்படுத்தப்படும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

விளம்பரம்

பெரும்பாலும் தவறான தகவல்களை பரப்ப, ஆள்மாறாட்டம் செய்ய அல்லது மோசடிகளை நடத்துவது போன்ற தீங்கான நோக்கங்களுக்காக டீப்ஃபேக் வீடியோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

.





Source link