Last Updated:

Vi Super Hero plan | இந்திய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சூப்பர் ஹீரோ வருடாந்திர திட்டங்களை Vi அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் நள்ளிரவு 12.00 முதல் மறுநாள் நண்பகல் 12.00 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இதுவரை Viஆனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் சூப்பர் ஹீரோ பலன்களை வழங்கி வந்தது, ஆனால், இப்போது நிறுவனம் அதன் வருடாந்திர திட்டங்களிலும் சூப்பர்…மேலும் படிக்கவும்

News18

நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா தனது 22 கோடி வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது. நீங்கள் Vi SIMஐ பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.

இந்திய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சூப்பர் ஹீரோ வருடாந்திர திட்டங்களை Vi அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் நள்ளிரவு 12.00 முதல் மறுநாள் நண்பகல் 12.00 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இதுவரை Viஆனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் சூப்பர் ஹீரோ பலன்களை வழங்கி வந்தது, ஆனால், இப்போது நிறுவனம் அதன் வருடாந்திர திட்டங்களிலும் சூப்பர் ஹீரோ நன்மைகளை வழங்கியுள்ளது.

Viஇன் சூப்பர் ஹீரோ ரீசார்ஜ்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் நன்மைகளை அனுபவிக்க முடியும். அத்தகைய ஒரு அம்சமானது, வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் ஆகும். இதில் வார நாட்களில் பயன்படுத்தப்படாத மீதமுள்ள டேட்டாவை, வார இறுதி நாட்களில் பயன்படுத்தப்படலாம். கூடுதலாக, இந்த திட்டங்கள் டேட்டா டிலைட் அம்சத்துடன் அவசரகால டேட்டா டாப்-அப் வசதியையும் வழங்குகிறது. இது மாதத்திற்கு இரண்டு முறை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. vi app மூலமாகவோ அல்லது 121249ஐ டயல் செய்வதன் மூலமாகவோ இந்தத் திட்டத்தை பெறலாம்.

ஒரு நாளைக்கு ரூ.10க்கும் குறைவான செலவில், Viஇன் வருடாந்திர சூப்பர் ஹீரோ பேக்குகள், மாதாந்திர ரீசார்ஜ் ரூ.1100 உடன் ஒப்பிடும்போது, ​​25 சதவீதம் வரை சேமிப்பை வழங்குகிறது. கூடுதலாக வாடிக்கையாளர்ளுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் லைட் போன்ற OTT ஆப்களுக்கான அக்சஸை ஒரு வருடத்திற்கு வழங்குகின்றன.

ரூ.3,699 பேக்கில் ரூ.499 மதிப்புள்ள ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இதற்கிடையில், Viஇன் சூப்பர் ஹீரோ திட்டங்களில் ரூ.3,799 திட்டம் மிகவும் விலை உயர்ந்தது, இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வார இறுதி டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட் மற்றும் ரூ.799 மதிப்புள்ள ஒரு வருட அமேசான் பிரைம் லைட் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவற்றை வழங்குகிறது.

இதையும் படிக்க: உலகின் முதல் ஃபோல்டபில் கேமிங் மானிட்டரை வழங்கும் எல்ஜி: விவரங்கள் இதோ…!

பிளான் கிடைக்கும் விவரங்கள் மற்றும் விலை:

இந்த சூப்பர் ஹீரோ திட்டத்தை மகாராஷ்டிரா, புது டெல்லி, குஜராத், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற பகுதிகளில் கிடைக்கும். இந்த திட்டங்கள் ரூ.365 முதல் தொடங்குகின்றன. தற்போதுள்ள அனைத்து டச்பாயிண்ட்கள் மற்றும் சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் செய்திகள்/தொழில்நுட்பம்/

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… அன்லிமிடெட் டேட்டா மற்றும் வருடாந்திர சேமிப்புடன் Vi சூப்பர் ஹீரோ திட்டம் அறிமுகம்…!



Source link