Last Updated:
ஸ்மார்ட்வாட்ச் 2.5D GPU அனிமேஷன் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது ஸ்மூத்தான ட்ரான்ஷிஷன்ஸ் மூலம் யூஸர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது.
லாவா நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச் லைன்அப்பில் இந்தியாவில் புதிதாக ProWatch V1 என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் ProWatch ZN மற்றும் ProWatch VN ஆகிய தயாரிப்புகளை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ProWatch V1ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும், இதில் ப்ளூடூத் அழைப்பு, IP68 ரேட்டிங் என பல அம்சங்கள் அடங்கும். இந்த இரண்டாம் தலைமுறை மாடல் எண் கோண வடிவத்தையும், 390×450 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 1.85-இன்ச் AMOLED ஸ்கிரீனையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த லேட்டஸ்ட் மாடல் நிறுவனத்தின் முந்தைய மாடல்களைவிட ஒரு இன்ச்சிற்கு 42% கூடுதல் பிக்சல்களை வழங்குகிறது. மேலும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொட்டக்ஷனையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.
லாவாவின் ப்ரோவாட்ச் வி1 அம்சங்கள்:
இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் Realtek 8773 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் Bluetooth v5.3 வெர்ஷனை சப்போர்ட் செய்கிறது. அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களின்போது துல்லியமான இருப்பிட கண்காணிப்புக்கான GPS Assist-ம் இதில் அடங்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள VC9213 PPG சென்சார் ஹார்ட் ரேட் மற்றும் SpO2 லெவல், ஸ்ட்ரஸ் மற்றும் ஸ்லீப் ட்ராக்கிங் உள்ளிட்ட துல்லியமான சுகாதார கண்காணிப்பு அம்சங்களை வழங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது ரன்னிங் முதல் யோகா வரை 110க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்ஸ்களைக் கொண்டுள்ளது. இது IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃபைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 2.5D GPU அனிமேஷன் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது ஸ்மூத்தான ட்ரான்ஷிஷன்ஸ் மூலம் யூஸர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது. இதனிடைய லாவா இன்டர்நேஷனல் லிமிடெட்டைச் சேர்ந்த சத்யா பேசுகையில், நாங்கள் ஸ்மார்ட்வாட்ச் செக்மென்ட்டில் நுழைந்தபோது, சந்தை இடைவெளிகளை நிவர்த்தி செய்வதும், நுகர்வோர் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதும் எங்கள் குறிக்கோளாக இருந்தது. நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது அறிமுகமாகி உள்ள ProWatch V1 ஸ்மார்ட் வாட்ச்சானது 2.5D GPU அனிமேஷன் எஞ்சின் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க: அமேசானில் பாதி விலையில் கிடைக்கும் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ராஃபோன்…!
லாவா ப்ரோவாட்ச் வி1 விலை…
லாவா ப்ரோவாட்ச் வி1-ஆனது பிளாக் நெபுலா, ப்ளூயிஷ் ரோனின், பீச்சி ஹிகாரி மற்றும் மின்ட் ஷினோபி உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,399இல் தொடங்கி ரூ.2,799 வரை இருக்கிறது. இந்த வாட்ச் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் கிடைக்கும். பீச்சி ஹிகாரி வேரியன்ட்டானது சிலிகான் + ரோஸ் கோல்ட் மெட்டல் ஸ்ட்ராப்பை உள்ளடக்கியது மற்றும் சால்ட் ஸ்ப்ரே கண்டிஷன்களில் 24 மணி நேரம் சோதிக்கப்பட்டது. இதன் விலை ரூ. 2,699. இதற்கிடையில், பிளாக் நெபுலா வேரியன்ட்டானது சிலிகான் + பிளாக் மெட்டல் ஸ்ட்ராப்பைக் கொண்டது மற்றும் சால்ட் ஸ்ப்ரே கண்டிஷன்களில் 48 மணி நேரம் சோதிக்கப்பட்டது மற்றும் இதன் விலை ரூ.2,799 ஆகும்.
January 17, 2025 1:53 PM IST