தனது மகளின் திருமண கொண்டாட்டங்களுக்கு மட்டும் மிகப்பெரும் கோடீஸ்வரரான லட்சுமி மிட்டல் ரூ. 240 கோடி அளவுக்கு செலவு செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி மிட்டல் உலகில் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தொழிலதிபராக சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களுக்கு லட்சுமி மிட்டல் முன்னோடியாக இருந்துள்ளார். இவரது மகளான வனிஷா மிட்டலின் திருமணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

விளம்பரம்

திருமணத்திற்கு ஆன செலவுகள் உலகையே திரும்பி பார்க்க வைத்தன. வனிஷா மிட்டலை தொழிலதிபரான அமித் பாட்டியா என்பவர் திருமணம் முடித்தார். டெல்லியை பூர்வீகமாக கொண்ட அமித் பாட்டியா பின்னாளில் உயர் கல்விக்காக பிரிட்டன் நாட்டிற்கு சென்றார்.

அமித் பாட்டியா கார்ப்பரேட் ஃபைனான்ஸ் மற்றும் பிரைவேட் ஈக்விட்டியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டில், அவர் லட்சுமி நிவாஸ் மிட்டலின் மகள் வனிஷா மிட்டலை மணந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தத் திருமணத்துக்கு ரூ.240 கோடி செலவிடப்பட்டது.

விளம்பரம்

கோடீஸ்வர எஃகு தொழிலதிபர், லட்சுமி நிவாஸ் மிட்டல் தனது மகள் மற்றும் மருமகனின் திருமணத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற விரும்பினார். மருமகன் அமித் பாட்டியாவை வரவேற்கவும், மகள் வனிஷாவுக்கு பிரியாவிடை அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் லட்சுமி நிவாஸ் மிட்டல் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

இதையும் படிங்க – Gold Rate | மீண்டும் விலை உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

இந்த பிரம்மாண்டமான இந்திய திருமண நிகழ்வு பிரான்சில் 6 நாட்கள் நீடித்தது. ஏற்பாடுகளைப் பார்க்கும்போது பாரிஸ் முழுக்க இந்தத் திருமணத்தைக் கொண்டாடுவது போலத் தோன்றியது. இந்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து 10,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், இந்த திருமண நிகழ்வில் ஷாருக்கான் உட்பட பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

லட்சுமி மிட்டலின் மகள் திருமணம் நடைபெற்ற கால கட்டத்தில் அதுதான் மிகவும் செலவு மிக்க திருமணமாக கருதப்பட்டது.

.



Source link