மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

இதனால் அவரச சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தியுள்ளனர். நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமாடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Source link