மகாவலி நீரேந்துப் பகுதிகளில் நேற்றிரவு (25) பெய்த கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திம்புலாகல, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த D/S பிரிவுகள் ஆகிய இடங்களில் மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
The post மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் appeared first on Thinakaran.