Last Updated:

ராஜமவுலி படத்திற்கு குறைந்தது ஓராண்டுக்கும் மேலாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

News18

மகேஷ் பாபு – ராஜமவுலி இணையும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை இடம் பெறுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவின் படத்தை இயக்குகிறார்.

அதிரடி சண்டை, சாகச காட்சிகளுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ஆறு மாதத்திற்கு மேலாக ப்ரீ புரொடக்சன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த படத்துக்காக மகேஷ் பாபு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உடல் தோற்றத்தை மாற்றி அமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை 2026 இறுதிவரை படமாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2027இல் இந்த படம் வெளியாகும். இந்த படத்தை டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து ராஜமௌலி படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் ஷூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க – ஜெயிலர் 2 படத்தில் இணையும் கே.ஜி.எஃப். பட பிரபலம்? கவனம் பெறும் தகவல்

இதற்கிடையே பிரியங்கா சோப்ரா சில ஹாலிவுட் படங்களில் பிஸியாகியுள்ளார். ராஜமவுலி படத்திற்கு குறைந்தது ஓராண்டுக்கும் மேலாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது



Source link