இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள் அதிகம் பதிவாகிறது. இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிக அபராதம், சிறைத்தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமங்களை இடைநிறுத்துவது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஓட்டுநர் ஒருவரின் ரத்தத்தில் 100 மில்லி கிராம் அளவில் 30 மில்லி கிராம் அளவு ஆல்கஹால் இருந்தால் அவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாகக் கருதப்படும்.
இப்படிப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் நாள்தோறும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்தே வருகிறது. இதற்காக மாநிலம் மற்றும் தேசியப் போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கடலில்லா மாவட்டத்தில் கடல் கன்னி ஷோ… வகைவகையாய் மீன்களைக் கண்டு கோவையன்ஸ் குதுகலம்…
இந்நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால் வாகனத்தின் இன்ஜினை ஆப் செய்து விடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் கன்னியாகுமரி தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்.
இது குறித்து மாணவிகள் கரிஷ்மா மற்றும் ஸ்ரீநிதி கூறுகையில், “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, நம்முடைய சாலைகளில் பேரழிவுகரமான விபத்துக்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நெருக்கடியான பிரச்சினையைச் சமாளிக்கவும், உயிர்களைக் காக்கவும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், மேம்பட்ட மதுவைக் கண்டறியும் முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்த அமைப்பில் Electrochemical Fuel Cell சென்சார்கள் ஓட்டுநரின் சுவாசத்தைத் துல்லியமாகக் கண்டறிய ஓட்டுநரின் இருக்கையைச் சுற்றிப் பாதுகாப்பு ரீதியாகப் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மூலம் எல். சி. டி. காட்சி கூறு நிகழ்நேர நிலவரங்கள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
இதையும் படிங்க: கிரவுட் இல்லாமல் கண்டுகளிக்கலாம்… சிம்ஸ் பூங்காவில் சில் பண்ணும் சுற்றுலாப் பயணிகள்…
ஓட்டுநரின் சுவாசத்தில் ஆல்கஹால் அளவு 0.03% ஐ விட அதிகமாக இருந்தால், டிஸ்பிளே “Don’t Drive” என்பதைக் காட்டும். ஆல்கஹால் அளவு வரம்புக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், டிஸ்பிளே “Drive ” என்பதைக் குறிக்கும். ஆல்கஹாலின் அளவு 0.03% அல்லது அதற்குறுகியதாக இருந்தால் மட்டுமே வாகனம் இயக்கப்படும், இல்லையெனில் வாகனம் இயக்கப்படாது.
இதன் மூலம், உண்மையிலேயே நிதானமான ஓட்டுநர்கள் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும்.இந்த அமைப்பை கார்கள், டிரக்குகள், பொது மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகளும் சரக்கு வாகனங்களும் உள்ள வேன்கள், டாக்ஸிகள், கையிருப்பு கார்கள், அவசர வாகனங்கள் (ஆம்புலன்சுகள், தீ அணைக்கும் வாகனங்கள்) போன்ற வகை வாகனங்களில் செயல்படுத்த முடியும். இந்தத் தொழில்நுட்பம்,குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதை உறுதி செய்கிறது” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.