பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா: பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மூலம் கிட்டத்தட்ட 48 கோடி நபர்கள் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டில் சேர்ந்துள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எக்ஸ் வலைதளத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்ட பதிவில் , பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் மொத்தம் 47.59 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும், பெறப்பட்ட கிளைம் கோரிக்கைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,93,964 என்றும், 1,47,641 கிளைம்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு வருட விபத்து காப்பீட்டு திட்டமாகும், இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது, விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது இயலாமைக்கான கவரேஜை வழங்குகிறது.
18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட தனி நபர்கள், வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள். விபத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது ஊனம் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.20 பிரீமியமாக பெறப்படும் இந்தத் திட்டத்தில், விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் ஊனமுற்றோர் காப்பீடாக ரூ. 2 லட்சம் (பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம்) வரை வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்) 54 கோடிக்கும் அதிகமான பயனாளிகளைக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள வங்கியில்லா குடிமக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் நிதிச் சேர்க்கைக்கான மூலைக்கல்லாக மாறியுள்ளது என்று நிதி அமைச்சகம் கூறியது. 28 ஆகஸ்ட் 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்), இந்த ஆண்டு ஆகஸ்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒரு தசாப்தத்தை (10 ஆண்டுகளை) நிறைவு செய்கிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய நிதிச் சேர்க்கைக்கான முன்முயற்சியாகும், இதன் மூலம் நிதியமைச்சகம் தனது நிதி தலையீடுகள் மூலம் விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க முயற்சிக்கிறது.
இதையும் படிக்க: சிபில் vs கிரெடிட் ஸ்கோர்: கடன் வாங்குவதற்கு இரண்டில் எது தேவை?
ஆகஸ்ட் 14, 2024 நிலவரப்படி, மொத்த பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளின் எண்ணிக்கை 53.13 கோடி ஆகும். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 55.6 சதவீதம் (29.56 கோடி) ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள் மற்றும் 66.6 சதவீதம் (35.37 கோடி) ஜன்தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் உள்ளன.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளின் கீழ் மொத்த டெபாசிட் இருப்பு ரூ.2,31,236 கோடியாக உள்ளது. ஆகஸ்ட் 15, 2024இல் கணக்குகளின் எண்ணிக்கை 3.6 மடங்கு அதிகரிப்பால், டெபாசிட் தொகையும் சுமார் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. முறையான நிதி வரலாறு இல்லாதவர்களுக்கு, கடன் அணுகலை வழங்கும் அதே வேளையில், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா சேமிப்பையும் செயல்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இந்த கிரெடிட் கார்டுகள் உங்க கிட்ட இருக்கா…? ரயில் டிக்கெட் முன்பதிவில் கேஷ்பேக் கன்ஃபார்ம்…!
கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது அவர்களின் சேமிப்புகளைக் காட்டலாம், இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கு அவர்களை தகுதியுடையவர்களாக மாற்றுகிறது. நிதி அமைச்சகத்தின்படி, 2019 நிதியாண்டு முதல் 2024 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் 9.8 சதவீத கூட்டு வருடாந்திர விகிதத்தில் முத்ரா கடன்களின் கீழ் உள்ள தடைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
December 23, 2024 12:16 PM IST